நாட்டின் பல நகரங்களில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையை எட்டியுள்ளதால் மக்கள் முகக்கவசம் அணியுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நிலைமை ஒரு வாரத்திற்கு தொடரும் என எதிர்பார்ப்பதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டொக்டர் அசேல குணவர்தன தெரிவித்துள்ளார்.
இந்தியாவில் இருந்து வீசும் காற்று காரணமாக கொழும்பு, குருநாகல், யாழ்ப்பாணம், இரத்தினபுரி, புத்தளம் மற்றும் கண்டி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் காற்றின் தரம் தற்காலிகமாக மோசமடைந்துள்ளது.
அதன்படி, முதியவர்கள், கர்ப்பிணிகள், குழந்தைகள், இதய நோயாளிகள் மற்றும் நுரையீரல் நோயாளிகள் முடிந்தவரை வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.