follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுபம்பலப்பிட்டியில் STF எனக்கூறி 27 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

பம்பலப்பிட்டியில் STF எனக்கூறி 27 இலட்சம் ரூபா பணம் கொள்ளை

Published on

பொலிஸ் விசேட அதிரடிப்படையின் அதிகாரிகள் (STF) எனக் கூறி பம்பலப்பிட்டி டூப்ளிகேஷன் வீதியில் காரை நிறுத்தி 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடித்த நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நேற்று (07) பிற்பகல் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், சந்தேக நபரும் மோட்டார் சைக்கிளும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகள் எனக் கூறி மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் காரை நிறுத்தி சோதனையிட முற்பட்ட போது காரின் உரிமையாளரிடம் இருந்து 27 இலட்சம் ரூபா பணத்தை கொள்ளையடுத்து தப்பிச் சென்றுள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன் கார் உரிமையாளரும் மற்றுமொரு நபரும் இணைந்து தப்பியோடிய நபரை பொன்சேகா வீதியில் வைத்து பிடித்து பம்பலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைத்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கொழும்பில் வசிக்கும் 41 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகின்றது.

சந்தேகநபர் இன்று புதுக்கடை நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படவுள்ளார்.

பம்பலப்பிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை

ஆசிரியர்களுக்கான ஆசிரியர் பேரவையொன்றை நிறுவுவதற்கு கல்வி அமைச்சு தயாராகி வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. அனைத்து ஆசிரியர்களும் இச்சபையில் பதிவு செய்திருக்க வேண்டும்...

“கல்வி தொடர்பான மாற்றங்களை அரசு மிகுந்த கவனத்துடன் எடுக்கும்”

மேலதிக வகுப்புகளை தடை செய்ய தீர்மானிக்கப்படவில்லை என அமைச்சரவை ஊடகப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று...

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிடியாணை

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு யாழ்ப்பாணம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஊடாக பிடியாணை பிறப்பிக்குமாறு கொழும்பு மேலதிக நீதவான்...