கொழும்பு உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இயங்கி வரும் புதிய போதைப்பொருள் வலையமைப்பு குறித்த தகவல்களை தினசரி நாளிதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது
சிங்கப்பூரில் இருந்து இந்த வலையமைப்பு செயற்படுவதாகவும், இலங்கையில் உள்ள பாதாள குழுக்களுடன் இணைக்கப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரர்கள் மூலம் உள்ளூர் வலையமைப்பை இயக்குவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
கொழும்பில் தினமும் 1 மில்லியன் ரூபா பெறுமதியான ஐஸ் போதைப்பொருள் மற்றும் ஹெரோயின் விற்கப்படுகின்றன இந்த போதைப்பொருள் வலையமைப்பினால் கடத்தல்காரர்கள் நாளாந்தம் சுமார் ரூ.30 மில்லியன் வருமானம் ஈட்டுகின்றனர் என குறித்த நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது
தெமட்டகொட கலிபுல்லாவத்தை, மாளிகாவத்தை அல்பா பிளாட் மற்றும் கெசல்வத்தை ஆகிய இடங்களில் போதைப்பொருள் விற்பனைகள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன.