சிறார்களுக்கு கொவிட் தடுப்பூசி செலுத்தும் திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருவதாக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தின் சிறுவர் வைத்தியசாலை கிளையின் செயலாளர் வாசன் ரட்ணசிங்கம் இதனைத் தெரிவித்துள்ளார்.
அதேநேரம், தடுப்பூசி செலுத்தப்பட்ட சிறுவர்களுக்கு ஏதேனும் பிரச்சினையிருப்பின், 070 270 3954 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு அவர் மேலும் தெரிவித்துள்ளார்.