follow the truth

follow the truth

April, 3, 2025
HomeTOP3உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

உள்ளூராட்சி தேர்தல் ஜனவரி 5ம் திகதி அறிவிக்கப்படும்

Published on

உள்ளூராட்சி தேர்தலை 2023 ஜனவரி 5 ஆம் திகதி அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழு திட்டமிட்டுள்ளதாகவும், மார்ச் 20 ஆம் திகதி தேர்தலை நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முழுமையாக தயாராக இருப்பதாகவும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் சட்டத்தரணி நிமல் புஞ்சிஹேவா டெய்லி சிலோன் செய்திப் பிரிவுக்கு தெரிவித்தார்.

இரண்டு மாதங்களுக்குள் 24 மாவட்டங்களையும் உள்ளடக்கிய உள்ளூராட்சி மன்றத் தேர்தல்கள் தொடர்பில் உரிய திணைக்களங்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், டிசம்பர் 13 மற்றும் 14 ஆம் திகதிகளில் புத்தளம் மற்றும் கம்பஹா ஆகிய பிரதேசங்களை உள்ளடக்கிய பின்னர் கொழும்பு மாவட்டம் மாத்திரம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் விசாரணைக்கு எஞ்சியுள்ளதாகவும் அவர் கூறினார்.

சிறிய வாக்கெடுப்பை தடுக்கும் வகையில் பாராளுமன்றத்தில் சட்டமூலம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக புஞ்சிஹேவா குறிப்பிட்டார். அதற்கு எதிராக யாராவது நீதிமன்றத்திற்கு சென்றால் SCFR/35/2016 உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உச்சநீதிமன்றம் அதன் அடிப்படையில் முடிவெடுக்க வேண்டும், எனவே கட்டாயமாக தேர்தலை நடத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்திருந்தார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

பீடி விலை அதிகரிப்பு

அனைத்து பீடி உற்பத்தி பொருட்களுக்கான புகையிலை வரி இன்று (02) முதல் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இரண்டு ரூபாயிலிருந்து...

இளம் பெண்களின் புகைப்படங்களை AI தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி நிர்வாணப்படுத்திய ஒருவர் கைது

இரண்டு பெண்களின் நிர்வாண புகைப்படங்களை செயற்கை நுண்ணறிவு மூலம் விளம்பரப்படுத்திய இரண்டு சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை...

துப்பாக்கிகளை மீள ஒப்படைக்காத 42 பேர் குறித்து விசாரணை

உயிர் பாதுகாப்புக்காக வழங்கிய துப்பாக்கிகளை திருப்பித் தருமாறு பாதுகாப்பு அமைச்சினால் வெளியிடப்பட்ட அறிவிப்பின்படி, இன்னும் 42 நபர்கள் தங்கள்...