தேசிய பால் உற்பத்தியை அதிகரிப்பதற்கு இந்தியாவின் தொழிநுட்ப உதவியை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்பட்டுள்ளது.
இறக்குமதி செய்யப்படும் பால்மாவில் சார்ந்திருப்பதை தவிர்த்து உள்ளுர் பால் உற்பத்தியை அதிகரிக்க உத்தேஷிக்கப்பட்டுள்ளது.
இதற்கென குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால திட்டத்தை தயாரிக்க இந்தியாவின் தேசிய கால்நடைவள அபிவிருத்தி சபையின் பல்துறை குழுவுடன் இணைந்து செயற்பாடுகளை முன்னெடுக்க குழு ஒன்று நியமிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் அரச மற்றும் தனியார் துறை பிரதிநிதிகளை கொண்ட குறித்த குழு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் நியமிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் தேசிய கால்நடை வள அபிவிருத்தி சபை, இந்தியாவின் அமுல் பால் நிறுவனத்துடன் இணைந்து இலங்கையின் திரவ பால் உற்பத்திக்கு தேவையான தொழிநுட்ப ஒத்துழைப்பை வழங்கவுள்ளது.
இது தொடர்பான முதற்கட்ட கலந்துரையாடல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதியின் செயலாளர் சமான் ஏக்கநாயக்க தலைமையில் இடம்பெற்றது.
தேசிய பால் உற்பத்தியை இருமடங்காக அதிகரிப்பது தொடர்பிலும், இலக்கை அடைவதற்கான வேலைத்திட்டத்தின் ஊடாக இலங்கையை நீண்டகால அடிப்படையில் பாலில் தன்னிறைவடையச்செய்வது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டுள்ளது.