லங்கா பிரீமியர் லீக் கிரிக்கெட் போட்டியின் மூன்றாம் கட்ட போட்டிகள் இன்று (06) முதல் ஆரம்பமாகவுள்ளன.
இலங்கையினுள் இடம்பெறும் சர்வதேச மட்டத்திலான ஒரேயொரு உள்நாட்டு கிரிக்கெட் போட்டியாகும். இதில் 05 அணிகள் பங்குபற்றுகின்றன.
இந்த வருட லங்கா பிரீமியர் லீக் போட்டியில் கொழும்பு ஸ்டார்ஸ், யாழ் கிங்ஸ், கோல்ட் கிளாடியேட்டர்ஸ், கண்டி ஃபால்கன்ஸ் மற்றும் தம்புள்ளை அவுரா ஆகிய அணிகள் போட்டியிடுவதுடன், இந்த அணிகள் ஒவ்வொன்றிலும் உள்ளூர் மற்றும் சர்வதேச வீரர்கள் இடம் பெற்றிருப்பது சிறப்பு.
18 நாட்கள் நடைபெறும் இச்சுற்றுப்போட்டியில் 24 போட்டிகள் இடம்பெறவுள்ளதுடன் போட்டிகள் சூரியவெவ, பல்லேகல மற்றும் கெத்தாராமை மைதானங்களில் நடைபெறவுள்ளன.
போட்டியின் இறுதிப் போட்டி டிசம்பர் 23 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
யாழ் கிங்ஸ் அணிக்கும் கோல்ட் கிளாடியேட்டர்ஸ் அணிக்கும் இடையிலான போட்டியின் ஆரம்ப போட்டி இன்று பிற்பகல் 03 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
இரண்டாவது போட்டி இன்று இரவு 7.30 மணிக்கு கொழும்பு ஸ்டார்ஸ் மற்றும் கண்டி ஃபால்கன்ஸ் அணிகளுக்கு இடையில் ஆரம்பமாகவுள்ளது.