புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மாஸ்கோவில் உள்ள தனது உத்தியோகபூர்வ இல்லத்தின் படிக்கட்டுகளில் இருந்து கீழே விழுந்ததாக அமெரிக்க நாளிதழ் ‘தி நியூயார்க் போஸ்ட்’ தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக, மற்ற வெளிநாட்டு ஊடகங்களோ, ரஷ்ய ஊடகங்களோ எந்த செய்தியையும் வெளியிடவில்லை. ரஷ்ய அரசும் எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை.
தி நியூயார்க் போஸ்ட் வெளியிட்ட தகவலின்படி, 70 வயதான புடின் வயிற்று புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். மாஸ்கோவில் உள்ள உத்தியோகபூர்வ இல்லத்தின் படிக்கட்டுகளில் இருந்து அவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உடலை சரியாக அசைக்க முடியாமல் கீழே விழுந்ததாக கூறப்படுகிறது.