தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை, கடந்த நவம்பர் மாதத்துடன் தொடர்புடைய கடன்களை மீளப்பெற்று, சொத்துக்கள் மூலம் 303 மில்லியன் ரூபா வருமானத்தை ஈட்டியுள்ளதாக அதன் தலைவர் ரஜீவ் சூரியாராச்சி தெரிவித்துள்ளார்.
இந்த மாதமும் 300 மில்லியன் ரூபாவிற்கும் அதிகமான வருமானத்தை எதிர்பார்ப்பதுடன், அடுத்த வருடமும் இதேபோன்று வருமான நிலையைப் பேணுவதற்கு தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திட்டமிட்டுள்ளது.
ஊழியர்களின் சம்பளம் மற்றும் ஏனைய செலவினங்களுக்காக சுமார் 150 மில்லியன் ரூபாவை அதிகார சபை செலவிடுகிறது.
எனினும், தற்போதைய வருமானத்தின்படி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகாரசபை திறைசேரிக்கு சுமையின்றி இயங்கக்கூடியதாக உள்ளதென அதன் தலைவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, எதிர்காலத்தில் வீடுகளை டொலர்களுக்கு விற்பனை செய்யும் வேலைத்திட்டத்தை தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபை அமுல்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.