follow the truth

follow the truth

November, 26, 2024
Homeஉள்நாடுசுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலி 

சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலி 

Published on

சுற்றுலாத்துறையை மேம்படுத்தும் போது இந்நாட்டுக்கு வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக புதிய கையடக்கத் தொலைபேசி செயலியொன்றை அறிமுகப்படுத்த நடவடிக்கை எடுப்பதாக சுற்றுலாத்துறை மற்றும் காணி அமைச்சர் ஹரின் பிரனாந்து தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை மற்றும் காணி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரின் தலைமையில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

நாட்டின் சுற்றுலாத்துறையின் மேம்பாடு தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள மற்றும் எதிர்பார்க்கப்படும் நடவடிக்கைகள் குறித்து விளக்கமளிக்கும் போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டதுடன், ஜனவரி முதல் இந்தக் கையடக்கத் தொலைபேசிச் செயலியை பயன்படுத்த முடியும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதேபோன்று, இந்த செயலி மூலம் சுற்றுலாப் பயணிகள் விரும்பினால் அவர்கள் இருக்கும் இடத்தை நோக்குவதற்கு அனுமதி வழங்குதல், அவர்கள் தொலைந்து போனால் அல்லது எதாவது பாதுகாப்பு நடவடிக்கைகளை எடுக்க வேண்டி ஏற்பட்டால் அதன்மூலம் அதனை மேற்கொள்ள முடியும் என அமைச்சர் விளக்கமளித்தார்.

மேலும், சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்புக்காக சுற்றுலாப் பயணிகளை கவரும் ஒவ்வொரு கடற்கரைப் பகுதிகளிலும் சுற்றுலா பொலிஸ் அணியொன்றை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார். விசேடமாக 2023 இல் 15 இலட்சம் சுற்றுலாப் பயணிகளை வரவழைக்க திட்டமிட்டுள்ளதாகவும் ஹரின் பிரனாந்து இதன்போது தெரிவித்தார்.

அதேபோன்று, காணி அளவிடும் நடவடிக்கைகள் தாமதமடைவது தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடப்பட்டதுடன், இந்த அளவிடும் பணிகளை வெளித் தரப்பினரைக் கொண்டு மேற்கொள்ள முடியுமா என பரிசீலித்து விரைவில் இந்த அளவிடும் பணிகளை நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்குமாறும் அமைச்சர் தெரிவித்தார். இது தொடர்பான அறிக்கையொன்றை அடுத்த குழுக் கூட்டத்தில் சமர்ப்பிக்குமாறும் அமைச்சர் பரிந்துரைத்தார்.

இவற்றுக்கு மேலதிகமாக, பல்வேறு மாவட்டங்களில் காணப்படும் காணிகள் சம்பந்தப்பட்ட சிக்கல்கள் மற்றும் சுற்றுலாத்துறை மேம்பாடு தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது.

 

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

சீரற்ற வானிலை – திருப்பி அனுப்பப்பட்ட விமானங்கள்

சீரற்ற வானிலை காரணமாக கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கவிருந்த 6 விமானங்கள் இன்று (26) திருப்பி அனுப்பப்பட்டுள்ளன....

காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை புயலாக வலுப்பெறும் அபாயம்

வங்காள விரிகுடாவில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாளை(27) புயலாக வலுப்பெறும் அபாயம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. இதன்...

வாகன இறக்குமதி குறித்து வெளியான தகவல்

வாகன இறக்குமதி தொடர்பில் தொழில் அமைச்சரும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சரான அனில் ஜயந்த பெர்னாண்டோ இன்று(26) விளக்கமளித்தார். “பல்வேறு...