சுயாதீன தொலைக்காட்சியில் மிக நீண்ட நாட்களாக தொடர் நாடகமாக வெளிவந்த பிரபல ‘கோபி கடே’ தொலைக்காட்சி நாடகத்தில் ‘சோமதாச’ எனும் கதாபாத்திரத்தில் நடித்த பிரபல நடிகரும் தொகுப்பாளருமான திலக் குமார ரத்னாயக்க இராஜினாமா செய்துள்ளார்.
குறித்த நாடகத்தில் ஒளிபரப்பட்ட ‘ஆசிரியர்களை அவமதிக்கும் மற்றும் புண்படுத்தல்’ அத்தியாயத்தின் காரணமாக தான் இராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
‘கோபி கடே’ நாடகத்தில் இருந்து தான் விலகியதற்கான காரணத்தை தனது பேஸ்புக்கில் காணொளி ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளார்.