நோயாளர் பராமரிப்புச் சேவைகளுக்காக இரண்டு மாதங்களுக்குத் தேவையான சேலைன் மருத்துவ விநியோகத் திணைக்களத்தில் வைத்திருப்பதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
வைத்தியசாலைகளில் ஒரு மாதத்திற்கு போதிய சேலைன் இல்லை என முன்னாள் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன நேற்று முன்தினம் (29) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.
இது தவறான அறிக்கை என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது. கண்டி பல்லேகலையில் உள்ள சேலைன் தொழிற்சாலையில் 12 இலட்சம் சேலைன் போத்தல்களும், சுகாதார அமைச்சின் மருத்துவ வழங்கல் திணைக்களத்தில் 12 இலட்சம் சேலைன் போத்தல்களும் உள்ளதனால் நாட்டில் உள்ள வைத்தியசாலைகளுக்கு தேவையான சேலைன் உற்பத்தி செய்து வழங்க முடியும் என சுகாதார அமைச்சு வலியுறுத்தியுள்ளது.
எனவே, வைத்தியசாலைகளில் சேலைன் தட்டுப்பாடு நிலவுவதாக வெளியாகியுள்ள தகவல்கள் பொய்யானவை என சுகாதார அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.