இலங்கையிலுள்ள உள்நாட்டு நிறுவனங்களுடன் மிகவும் நெருக்கமாக இணைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள அர்ப்பணிக்கும் எயார்டெல் லங்கா தொலைத்தொடர்பு நிறுவனம், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்துடன் (GMOA) மற்றும் அங்குள்ள 23,000 உறுப்பினர்களுக்கு பிரத்தியேகமான தொலைத்தொடர்பு தீர்வுகளை வழங்குவதற்காக அந்த சங்கத்துடன் அண்மையில் கைகோர்த்துக் கொண்டுள்ளது.
இந்நிகழ்வைக் குறிக்கும் விசேட வைபவத்தில் GMOA தலைவர் டொக்டர் தர்ஷன சிறிசேன, செயலாளர் டொக்டர் ஹரித அலுத்கே, உபதலைவர் டொக்டர் சந்திக எபிடகடுவ, உதவி செயலாளர் டொக்டர் பிரபாத் சுகததாச மற்றும் Airtel Sri Lankaவின் பிரதம நிறைவேற்று அதிகாரியும் முகாமைத்துவப் பணிப்பாளருமான அஷிஷ் சந்திரா, அதுல திஸாநாயக்க, பிரதம சந்தைப்படுத்தல் அதிகாரி, சாந்த பெர்னாண்டோ, பிரதம சேவை அலுவலக அதிகாரி, ஃபவாஸ் நிசாம்தீன் மற்றும் முகாமையாளர் பிற்கொடுப்பனவு விற்பனை, இந்துனில் சண்தருவன் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.
இந்த கூட்டிணைவு மூலம், 126 தேசிய மருத்துவமனைகளில் உள்ள GMOA முழு உறுப்பினர்களும் 1 வருட காலத்திற்கு வரையறையற்ற அழைப்புத் திட்டங்களுக்குத் தகுதி பெறுவார்கள். எயார்டெல் நிறுவன தீர்வுகள் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட சேவைகள் மூலம் அலுவலக இணைப்புகள் மற்றும் பிற சேவைகளை GMOA க்கு எயார்டெல் வழங்கும். எயார்டெல்லின் புத்தாக்கமான நிறுவனச் சேவைகள், பலதரப்பட்ட தொழில்களில் உள்ள வணிகங்களை அதிக திறன் மற்றும் உற்பத்தித்திறனைப் பெறுவதற்கு அதிகாரம் அளிக்கிறது, இது சுகாதாரத் துறையில் ஒரு முக்கியத் தேவையாக இயல்பாகவே ஏற்றுக்கொள்ளப்படுகிறது.