நவம்பர் 30 ஆம் திகதி வரை மாத்திரம் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு இலங்கை மின்சார சபைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
புதன்கிழமைக்கு (30) பின்னர் மின்வெட்டுக்கான அனுமதி இன்னும் வழங்கப்படவில்லை என்றும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
நவம்பர் 25ஆம் திகதி முதல் மூன்று மணித்தியால மின்வெட்டை அமுல்படுத்துவதற்கான மின்சார சபையின் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது