கொவிட் தொற்றினால் உயிரிழப்பவர்களுக்கு தெஹிவளை -மவுண்ட்லவெனியா மாநகர சபையால் அறிமுகம் செய்யப்பட்ட மலிவான காட்போட் பிரேதப் பெட்டிகள் இப்போது வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.
இதன்படி 1200 காட்போட் பிரேதப் பெட்டிகள் நேற்று வியட்நாமுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையிலுள்ள வியட்நாமியத் தூதரக அதிகாரிகள், வியட்நாமிலுள்ள இலங்கை சங்கநாயகத் தேரர் மற்றும் தெஹிவளை-கல்கிசை மாநகர சபையின் தலைவர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற கலந்துரையாடலை தொடர்ந்து குறித்த இந்த செயற்றிட்டம் இடம்பெற்றுள்ளது.