அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்திற்குள் நாட்டு மக்களுக்கு தடையின்றி மின்சாரத்தை வழங்குவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் எடுப்பதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர நேற்று தெரிவித்தார்.
பெப்ரவரி 2022 முதல் இலங்கை தினசரி மின்வெட்டுகளை அனுபவித்து வருகிறது, ஒரு கட்டத்தில் மின்வெட்டு 13 மணி நேரமாக நீடித்தது, இது இப்போது ஒரு நாளைக்கு இரண்டு மணிநேரமாக குறைந்துள்ளது.
இது தொடர்பில் கருத்து வெளியிட்ட அமைச்சர், கடந்த சில மாதங்களில் மின்வெட்டை பெருமளவு குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளோம் என்றார். எவ்வாறாயினும், மின்சாரக் கட்டணத்தை திருத்தியமைக்காமல் அதனைச் செய்ய முடியாது என சுட்டிக்காட்டிய அவர், ஒவ்வொரு வருடமும் ஜனவரி மற்றும் ஜூன் மாதங்களில் மின்சாரக் கட்டணத்தை மீள்திருத்தம் செய்வதே சிறந்தது எனத் தெரிவித்தார்.