2023 வரவு செலவுத்திட்டத்தின் நான்காம் நாள் குழுநிலை விவாதம் இன்று சனிக்கிழமை காலை நாடாளுமன்றத்தில் ஆரம்பமானது.
பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மற்றும் விளையாட்டு, இளைஞர் விவகார அமைச்சுக்களின் செலவினங்கள் குறித்து இன்று விவாதம் நடைபெற உள்ளது.
2023 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் அல்லது குழுநிலை விவாதம் கடந்த புதன்கிழமை ஆரம்பமானது.
குழுநிலை விவாதம் டிசம்பர் 8ஆம் திகதி வரை நடைபெறவுள்ள நிலையில் 2இறுதி வாக்கெடுப்புக்கு அன்றைய தினம் மாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது.
இதேவேளை, வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு கடந்த செவ்வாய்க்கிழமை நாடாளுமன்றத்தில் 37 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக 121 நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிராக 84 நாடாளுமன்ற உறுப்பினர்களும் வாக்களித்தனர்.