நாட்டின் சனத்தொகையில் 60 சதவீதமானோருக்கு குழாய் மூலம் நீர் விநியோகிக்கப்படுவதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.
எஞ்சிய 40 சதவீதமானோருக்கு எதிர்வரும் 2025ஆம் ஆண்டுக்குள் குழாய் நீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
‘அனைவருக்கும் நீர்’ என்ற இந்த வேலைத்திட்டத்திற்காக 2,000 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அந்த தொகையில் இதுவரை 176 பில்லியன் ரூபாவுக்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் அமைச்சு தெரிவித்துள்ளது.