follow the truth

follow the truth

September, 24, 2024
Homeஉள்நாடுகருத்தடை அறுவை சிகிச்சை விலையும் அதிகம்

கருத்தடை அறுவை சிகிச்சை விலையும் அதிகம்

Published on

அரசு கால்நடை மருத்துவ மனைகளில் நாய், பூனைகளுக்கு கருத்தடை அறுவை சிகிச்சை நிறுத்தப்பட்டுள்ளதால், தனியார் கால்நடை மருத்துவமனைகள் மூலம் இந்த கருத்தடை அறுவை சிகிச்சை செய்ய அதிக பணம் செலவாகுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

நான்கு முதல் ஐந்து ஆண்டுகளுக்கு முன், அரசு கால்நடை அலுவலகங்கள் மூலம் நாய், பூனைகளுக்கு கருத்தடை செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டது. கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதாரத் துறையின் மூலம் இந்த திட்டம் இலவசமாக தொடங்கப்பட்டது. அங்கு கால்நடை மருத்துவ அலுவலகங்களுக்கு அரசு சார்பில் இலவச மலட்டு அறுவை சிகிச்சை மருந்துகள் வழங்கப்பட்டு வாரம் ஒருமுறை அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன.

ராஜித சேனாரத்ன சுகாதார அமைச்சராக இருந்த காலத்தில், இந்த கருத்தடை திட்டம் சுகாதார திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்டதாகவும் அதன் பின்னர் கால்நடை உற்பத்தி மற்றும் சுகாதார திணைக்களம் தொடர்பான மருந்துகள் வெளியிடப்படவில்லை எனவும் கால்நடை இராஜாங்க அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த வேலைத்திட்டம் சுகாதார அமைச்சின் கீழ் கையகப்படுத்தப்பட்டுள்ள போதிலும் போதிய கால்நடை வைத்தியர்கள் அமைச்சில் இல்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

அதன் காரணமாகவே இத்திட்டம் நிறுத்தப்பட்டு தனியார் கால்நடை மருத்துவ மனைகளில் அறுவை சிகிச்சை செய்ய 1500 முதல் 3000 ரூபாய் வரை செலவழிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கையிருப்பிலுள்ள எரிபொருள் குறித்து காஞ்சனா விஜேசேகர அறிவிப்பு

நாட்டில் உள்ள எரிபொருள் இருப்புக்கள் தொடர்பில் முன்னாள் மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர விளக்கமளித்துள்ளார். அவரது அதிகாரப்பூர்வ...

ஜனாதிபதியின் பிரத்தியேக செயலாளராக ஆனந்த விஜயபால நியமனம்

ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் தனிப்பட்ட செயலாளராக கே. ஆனந்த விஜயபால நியமிக்கப்பட்டுள்ளார். அரசாங்க தகவல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில்...

பங்குச் சந்தை விலைக் குறியீடு உயர்ந்துள்ளது

ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஒரு நாளின் பின்னர், கொழும்பு பங்குச் சந்தையின் (CSE) அனைத்து பங்கு விலைச் சுட்டெண்...