இரத்மலானை புகையிரத தொழிற்சாலையில் ருமேனியம் ரக ரயில் பெட்டியொன்று தீப்பிடித்துள்ளது.
AFC 15605 ரக ருமேனியம் ரயில் பெட்டி தீப்பிடித்து எரிந்துள்ளதாகவும், அந்த வண்டி பழுதுபார்க்கும் பணியில் ஈடுபட்டு வருவதாகவும் கூறப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த தீ விபத்தில் காயமோ அல்லது உயிர் சேதமோ ஏற்படவில்லை என்றும், ரயில் பெட்டி பலத்த சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.