இலங்கை அணிக்கும், இலங்கைக்கு விஜயம் செய்துள்ள ஆப்கானிஸ்தான் அணிக்கும் இடையிலான முதலாவது ஒருநாள் சர்வதேசப் போட்டித் தொடர் இன்று (25) கண்டி பல்லேகல சர்வதேச மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
இருபதுக்கு 20 உலகக் கிண்ணப் போட்டிகளின் பின்னர் இலங்கை அணி போட்டியில் பங்குபற்றுவது இதுவே முதல் தடவையாகும். இலங்கை மற்றும் அவுஸ்திரேலியா அணிகளுக்கிடையிலான ஒருநாள் தொடரை இலங்கையில் வென்று இலங்கையும், சிம்பாப்வேக்கு எதிரான கடைசி தொடரை வென்ற ஆப்கானிஸ்தானும் இந்தப் போட்டித் தொடரில் நுழைகின்றன.
இந்த போட்டி குறித்து இலங்கை அணித்தலைவர் தசுன் ஷானக கருத்து தெரிவிக்கையில்,
“இலங்கை தனது வழக்கமான ஆட்டத்தை இப்போட்டியில் நிச்சயம் வெளிப்படுத்தும் என நான் நம்புகிறேன். என் நம்பிக்கை வீண் போகவில்லை. வேகப்பந்து வீச்சாளர்களின் காயம் காரணமாக நாம் லஹிரு குமார், அசித பெர்னாண்டோ போன்ற வீரர்களை பயன்படுத்துகிறோம். துஷ்மந்த இல்லாதது பெரியதொரு இழப்பு. இந்தப் போட்டியில் துனித் வெல்லலாவும் விளையாடவுள்ளார்..”
அடுத்த ஆண்டு இந்தியாவில் நடைபெறவுள்ள ஒருநாள் உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்று ஆட்டமாக இது நடைபெறவுள்ளது.
போட்டியின் இரண்டாவது மற்றும் மூன்றாவது போட்டிகள் முறையே 27 மற்றும் 30 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளன.