சமூக ஊடகங்கள் வரையறுக்கப்பட செய்யப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் கபில அத்துகோரள நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று (24) வரவு செலவுத்திட்ட விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
“ஊடகங்களுக்கு ஒழுக்கம் இருக்க வேண்டும், ஊடகங்கள் இந்த நாட்டில் அதிகாரத்தை கைப்பற்ற முயல்கின்றன என்றால், இந்த நாட்டில் சட்டம் எங்கே? சமூக வலைத்தளங்கள் கட்டுப்படுத்தப்பட வேண்டும், பெண்களின் பெயரில் ஆண்களின் கணக்குகள் உள்ளன, பெண்களின் கணக்குகள் ஆண்களின் பெயரில் பயன்படுத்தப்படுகிறது.
இந்த சமூக வலைதளத்தில் யாரையும் அம்பலப்படுத்த இவர்கள் தயாராக உள்ளனர். யார் மீதும் வெறுப்பை பரப்புவதற்கு இந்த சமூக ஊடகம் தயாராக உள்ளது..”