திருத்தப்பட்ட ரயில் நேர அட்டவணையை தயாரிக்கும் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக ரயில்வே திணைக்களம் தெரிவித்துள்ளது.
ரயில்வே பொது மேலாளர் டபிள்யூ. ஏ.டி. எஸ். குணசிங்க குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி, அட்டவணை விரைவில் வெளியிடப்பட்டு, அடுத்த வாரத்தில் நடைமுறைக்கு வரும் திகதி அறிவிக்க எதிர்பார்ப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் தடம் புரண்டது தொடர்பான முறைப்பாடுகளை கருத்தில் கொண்டு, ரயில் பாதையின் பாழடைந்த பகுதிகளில் குறைந்த வேகத்தில் ரயில்களை இயக்க வேகத்தடை விதிக்கப்பட்டது.
வேகத்தடை விதிப்பதால் ஏற்படும் ரயில் காலதாமதத்தை கருத்தில் கொண்டு ரயில் அட்டவணை திருத்தப்பட உள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையில், ரயில் தாமதம் காரணமாக, பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளுராட்சி அமைச்சு, அங்கு வரும் அதிகாரிகளுக்கு திட்டமிடப்பட்ட கடமை நேரத்திலிருந்து வருவதற்கு அரை மணித்தியாலமும், புறப்படுவதற்கு ஒரு மணிநேரமும் அவகாசம் வழங்க தீர்மானித்துள்ளது.
கடமைக்கு இடையூறு ஏற்படாத வகையில் உரிய கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும், இந்த அவகாசம் பெறும் அதிகாரிகள் மதிய உணவு நேரத்தின் போது இயன்றவரை சம்பந்தப்பட்ட கடமைகளை ஈடுகட்ட ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.