எமிரேட்ஸ் எயார்லைன்ஸ் டிசம்பர் முதலாம் திகதி முதல் துபாய்க்கும் கட்டுநாயக்கவுக்கும் இடையில் மேலதிக விமானங்களை சேவையிலீடுபடுத்த தீர்மானித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
விமானப் பயணச்சீட்டுக்கான கோரிக்கையை கவனத்தில் கொண்டு இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டுள்ளது..
இதேவேளை, எதிர்வரும் பண்டிகைக் காலத்தில் சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை சுற்றுலா சபை தெரிவித்துள்ளது.