கட்சியின் மத்திய குழுவின் தீர்மானத்திற்கு எதிராக வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான துமிந்த திஸாநாயக்கவுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களிக்க கட்சியின் மத்திய குழு தீர்மானித்ததாகவும், அக்கூட்டத்தில் துமிந்த திசாநாயக்கவும் கலந்துகொண்டதாகவும் மைத்திரிபால சிறிசேன மேலும் தெரிவித்தார்.