பாடசாலை மாணவர்களின் தந்தையர்களுடன் தவறான உறவு வைத்துக்கொண்டுதான் ஆசிரியர்கள் வசதியான உடைகளைக் கேட்கிறார்களா என 69வது பிரிவு ஒருங்கிணைப்பாளர் டான் பிரியசாத் கேள்வி எழுப்பியிருந்தார்.
அறைகளுக்குச் சென்றவுடன் புடவையைக் கழற்றுவது சிரமமாக இருப்பதால், வசதியாக உடைகளைக் கேட்கிறார்களோ என்று சந்தேகிக்கலாம் எனவும் தெரிவித்திருந்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
மேலும், அரசு அலுவலகங்களுக்கு எளிதான மற்றும் கண்ணியமான உடையில் பணிக்கு வரலாம் என வெளியிடப்பட்ட சுற்றறிக்கை பாடசாலை ஆசிரியர்களுக்கு பொருந்தாது என்று அரசு அறிவித்திருந்த நிலையில்,நேற்றைய தினம் பல பகுதிகளில் அதற்கு எதிர்ப்பு அலைகள் எழுந்த வண்ணம் இருந்ததனை காணக்கூடியதாக இருந்தது.
இதில் சில ஆசிரியைகள் ஒழுக்கமான முறையில் தாம் புடவை அணிந்து வருவதை விரும்புவதாக தெரிவித்திருந்த நிலையில் சில ஆசிரியைகள் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர்.
இவ்வாறு இருக்க ஒன்றோ இந்நாட்டில் உள்ள கல்வியமைச்சர் சுசில் பிரேமஜயந்த பதவி இராஜினாமா செய்து ஜோசப் ஸ்டாலினை கல்வி அமைச்சராக்க வேண்டும். அவ்வாறு ஜோசப் அமைச்சரானதும் அவருக்கு தேவையானதை அவரே பூர்த்தி செய்து கொள்வார்.
இந்நாட்டிலுள்ள ஆசிரியைகள் அணிய வேண்டியது புடவையா அல்லது பிகினியா என தெரிவு செய்வது ஜோசப் ஸ்டாலின் எனத் தெரிவித்திருந்த டான் ப்ரியசாத், ஜோசப் ஸ்டாலினுக்கு மன நோய் என்பதற்காக ஆசிரியைகளுக்கு சாரிக்கு பதிலாக வேறு ஆடைகளை அணிந்து அழகு பார்க்கும் காம ஆசை அவரை தூண்டியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
மேலும், நேற்று வந்திருந்த சில ஆசிரியைகள் தெரிவித்திருந்தனர் தமக்கு பணிக்கு செல்ல வசதியான இலகு ஆடைகளை அணிந்து வர அனுமதி வழங்க வேண்டும் என்றனர். இவர்கள் ஜேவிபி கட்சியின் அல்லக்கைகள். அவர்கள் அணிந்து வந்திருந்த ஆடையினை பார்த்தால் புடவை நான்கு ஐந்து வாங்கலாம். நாம் ஜனாதிபதி, சபாநாயகர் மற்றும் கல்வியமைச்சர் ஆகியோருக்கு ஒரு கோரிக்கை ஒன்றினை கையளிக்க தீர்மானித்துள்ளதாகவும், அதில் அனைத்து ஆசிரியைகளுக்கும் ஒரே நிறத்திலான சாரி ஒன்றினை வழங்க வேண்டும் எனவும் கோரவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்திருந்தார்.
பாடசாலை மாணவர்களுக்கு சீருடை வழங்குவது போல் ஆசிரியைகளுக்கும் வழங்க வேண்டும் என அவர் கோரியிருந்தார்.
பாடசாலை அருகே சில மாணவர்களது தந்தையர்கள் வருகின்றனர். நேற்று இலகு ஆடை கோரிய ஆசிரியர்களுக்கும் அந்த தந்தையர்களுக்கும் ஏதோ ஒருவிதத்தில் தொடர்பு இருக்கலாம். ஏனென்றால் அவசரமாக அருகிலுள்ள ஐநூறு ஆயிரம் ரூபாவுக்குள்ள அறைகளுக்கு சென்றால் புடவையை கழற்றி விட்டு அணிய முடியாது. சில ஆசிரியைகள் அம்மாவிடம் கூறி புடவையை அணிந்து வருகிறார்கள். ஆனால் இவ்வாறு அறைகளுக்கு சென்றால் புடவையை கழற்றினால் அதனை அணியத் தெரியாதே அதனால் தான் இவர்கள் இலகு ஆடைகளை கோருகின்றதாக டான் ப்ரியசாத் மேலும் குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு அனுமதி வழங்கினால் எதிர்காலத்தில் இலகு ஆடை என்று கூறி பிகினியில் பாடசாலைக்கு வரவும் அனுமதி கோருவார்கள் என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.