follow the truth

follow the truth

April, 20, 2025
Homeஉள்நாடுதற்போதைய அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – கொழும்பு பேராயர்

தற்போதைய அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்கள் வேண்டும் – கொழும்பு பேராயர்

Published on

தற்போது நடைமுறையில் உள்ள இந்த நாட்டின் சட்டங்கள், ஒரு தனிநபருக்கு அல்லது ஒரு குறிப்பிட்ட தரப்பிற்கு முழு தேசத்தையும் அவரவர் விருப்பத்திற்கேற்ப ஆட்சி செய்ய அதிகாரம் அளிக்கும் வகையில் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதாக கொழும்பு பேராயர் தெரிவித்தார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்ட 12 குடும்பங்களுக்கு புதிதாக நிர்மாணிக்கப்பட்ட 12 வீடுகளை கையளிக்கும் கூட்டத்தில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே கொழும்பு பேராயர் கர்தினால் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை இவ்வாறு குறிப்பிட்டார்.

இந்நிலையில் தற்போதுள்ள அரசியல் அமைப்பில் கடுமையான மாற்றங்களை கொண்டு வர வேண்டும் என்றும் உண்மையான ஜனநாயகத்தை அனுமதிக்கும் புதிய அரசியலமைப்பை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

சுதந்திரம் அடைந்து கடந்த 74 ஆண்டுகாலமாக மக்களுக்கு பொய்களை சொல்லி அவர்களை ஏமாற்றி அவர்கள் விரும்பியதைச் சாதிப்பதற்காக அரசியல் தலைவர்கள் சட்டத்தைக் கையாண்டனர் என்றும் குற்றம் சாட்டினார்.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

கொட்டாஞ்சேனையில் விசேட போக்குவரத்து திட்டம்

கொட்டாஞ்சேனை பொலிஸ் பிரிவு மற்றும் கடலோர பொலிஸ் பிரிவுகளுக்கு உட்பட்ட வீதிகளில் நாளை (21) போக்குவரத்து மட்டுப்படுத்தப்படவுள்ளதாக பொலிஸார்...

இலங்கை போக்குவரத்து சபைக்கு சுமார் 1,300 மில்லியன் ரூபா வருமானம்

கடந்த 10 ஆம் திகதி முதல் நேற்று (19) வரையான காலப்பகுதியில் தேசிய போக்குவரத்து சபை சுமார் 1,300...

மீரிகம பகுதியில் புதிய நுளம்பு இனம் அடையாளம்

இலங்கைக்கே உரித்தான புதிய நுளம்பு இனமொன்று மீரிகம பகுதியில் அடையாளம் காணப்பட்டுள்ளது. குறித்த நுளம்பு இனம் கியூலெக்ஸ் லொபசெரோமியா சின்டெக்லஸ்...