2023ஆம் ஆண்டு நாடு முழுவதும் யானைகள் கணக்கெடுப்பு நடத்தப்படும் என இலங்கையின் விவசாயம், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
இலங்கையில் இறுதியாக யானைகள் கணக்கெடுப்பு ஒரு தசாப்தத்திற்கு முன்னர் 2011 இல் நடத்தப்பட்டது.
யானை – மனித மோதலை குறைப்பதற்கான நீண்ட கால வேலைத்திட்டம் தயாரிக்கப்படும் என்றும், அதில் ஒன்றாக காட்டு யானைகளின் எண்ணிக்கை தொடர்பில் கணக்கெடுப்பு நடத்தப்படும் என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.