நீதிமன்றத்தில் சரணடைந்த சட்டத்தரணி நுவான் போபகே 5 இலட்சம் ரூபா சரீரப் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே முன்னிலையில் அவர் ஆஜராகிய போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த ஜுலை 9 ஆம் திகதி போராட்டக்காரர்கள் ஜனாதிபதி செயலகத்திற்குள் அத்துமீறி பிரவேசித்தமை தொடர்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கின் 59 ஆவது சந்தேகநபராக சட்டத்தரணி நுவான் போபகே பெயரிடப்பட்டுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் அவர் சந்தேகநபராக பெயரிடப்பட்டிருந்ததுடன், சட்டத்தரணிகள் வழங்கிய அறிவிப்பிற்கு அமைய நுவான் போபகே நீதிமன்றத்தில் இன்று முன்னிலையாகியிருந்தார்.