இறக்குமதி மற்றும் ஏற்றுமதி கட்டுப்பாட்டாளரின் செயற்பாட்டின் காரணமாக இலங்கையில் மீண்டும் பால் மா தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக பால் மா இறக்குமதியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவிக்கும் போதே அதன் தலைவர் லக்க்ஷமன் இவ்வாறு தெரிவித்தார்.
இதன் காரணமாக எதிர்காலத்தில் பால் மா தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும் வெளிநாட்டில் இருந்து பால் மா பவுடரை விநியோகிக்கும் முகவர்கள் இந்தப் பால் மாவை வியட்நாம் மற்றும் இந்தோனேஷியாவுக்கு மீண்டும் அனுப்புமாறு கூறுகிறார்கள் எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.