தூத்துக்குடியிலிருந்து இலங்கைக்கு பீடி இலைகளை சட்டவிரோதமாக கொண்டுவர மேற்கொள்ளப்பட்ட முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடியிலிருந்து நடுக்கடல் பகுதியில் இந்திய படகுகளிலிருந்து இலங்கை படகிற்கு பீடி இலைகள் அடங்கிய பொதிகள் மாற்றப்பட்ட போது அவை கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பில் 14 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
அவர்களில் 08 பேர் தூத்துக்குடியை சேர்ந்தவர்கள் எனவும், ஏனைய 6 பேரும் இலங்கையை சேர்ந்தவர்கள் எனவும் தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
பீடி இலைகளை கடத்துவதற்கு பயன்படுத்தப்பட்ட 04 படகுகள் தமிழக கரையோர காவற்படையினரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
கைது செய்யப்பட்டவர்கள் தூத்துக்குடிக்கு அழைத்துச்செல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.