இலங்கையின் அதிவேகமாக வளர்ந்து வரும் தொலைத்தொடர்பு சேவை வழங்குநரான Airtel, Daraz 11.11 விற்பனைக்கான ‘உத்தியோகப்பூர்வ தொலைத்தொடர்பு பங்குதாரராக’ Daraz உடனான தனது மூலோபாய கூட்டாண்மையை அறிவித்துள்ளது.
உள்ளூர் e-commerce நிறுவனமான Daraz.lk உடனான கூட்டாண்மை, 2022 நவம்பர் 11 முதல் 17 வரையிலான விற்பனை மேம்படுத்தல் காலத்தில் Airtel பாவனையாளர்களுக்கு பிரத்தியேக சலுகைகள், கழிவுகள் மற்றும் பரிசுகளையும் வழங்குகிறது.
11.11 விற்பனைக்காக தயாராகியுள்ள, Daraz App எயார்டெல் நெட்வோர்க்கில் ‘Whitelisted’ செய்யப்பட்டுள்ளது, பாவனையாளர்கள் Appஐ இலவசமாக அணுக முடியும். இதனால் எயார்டெல் நெட்வொர்க்கில் வாங்குபவர்கள் தங்களுக்குப் பிடித்தமான சில்லறை விற்பனையாளர்களை Appல் Browsing செய்ய, டேட்டா கட்டணங்களைப் பற்றி கவலைப்படாமல் தங்கள் Shopping Cart களை பூர்த்தி செய்யவும் நிறைய நேரம் ஒதுக்குகிறார்கள். இது அனைத்து எயார்டெல் மற்றும் Daraz வாடிக்கையாளர்களுக்கும் ஒரு தனித்துவமான சலுகையாக அமையும்.
அந்த வாரத்தில், புதிய மற்றும் ஏற்கனவே உள்ள எயார்டெல் ரூ.749 பாவனையாளர்களுக்கு தலா ஒரு புத்தம் புதிய ஸ்மார்ட்போனை வெல்லும் வாய்ப்பு கிட்டும். மேலும், புதிய எயார்டெல் ரூ.749 இணைப்பை வாங்கும் வாடிக்கையாளர்கள் நாட்டில் எந்த பகுதிக்கும் இலவச Delivery சலுகையை அனுபவிக்க முடியும்.