ரயில் இயந்திர சாரதிகள் மேற்கொண்டு வரும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை காரணமாக பல ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ரயில் இயந்திர சாரதிகள் நேற்று நள்ளிரவு முதல் பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.
ரயில் இயந்திர சாரதிகள் தங்கும் அறைக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளமைக்கு எதிர்ப்பு தெரிவித்தே பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளதாக சாரதிகள் குறிப்பிட்டுள்ளனர்.
இதனால் கொழும்பு புறக்கோட்டையிலிருந்து, சிலாபம், குருனாகலை, பாணந்துறை மற்றும் வெயாங்கொடை ஆகிய பகுதிகளுக்கான ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.