ஊழல் எதிர்ப்பு சட்டமூலத்தை அனைத்து கட்சித் தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புகளிடம் கையளிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக நீதி அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த சட்டமூலம் தொடர்பாக அனைத்து தரப்பினரதும் கருத்துகள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக நீதி அமைச்சர், கலாநிதி விஜயதாஸ ராஜபக்ஸ தெரிவித்தார்.
அனைத்து தரப்பினரது கருத்துகளையும் பெற்றுக்கொண்டதன் பின்னர் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
ஊழலுக்கு எதிரான ஐக்கிய நாடுகள் சபையின் சாசனத்திற்கு அமைவாக சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.