அவுஸ்திரேலியாவின் மெல்பர்ன் நகர் உள்ளிட்ட தென்கிழக்கு பிராந்தியத்தில் 6.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது.
அந்த நாட்டு நேரம்படி இன்று (22)முற்பகல் 9:15 அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சில கட்டிடங்கள் சேதமடைந்தமை தொடர்பிலான காணொளிகள் சமூக வலைத்தளங்களில் வௌியாகியுள்ளன.
தொடர் நடுக்கங்கள் தொடர்பில் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு விக்டோரியா மாநில அவசர சேவை பிரிவு பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.