ICC உலக கிண்ண, இருபதுக்கு 20 தொடரின் முதலாவது அரையிறுதி போட்டி இன்று இடம்பெறவுள்ளது.
இந்த போட்டியில், நியுஸிலாந்து மற்றும் பாகிஸ்தான் ஆகிய அணிகள் மோதவுள்ளன.
குறித்த போட்டியானது இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 1.30க்கு சிட்னியில் ஆரம்பமாகவுள்ளது.
இந்த இரண்டு அணிகளும் இதுவரை சர்வதேச கிரிக்கட் பேரவையின் உலக கிண்ண இருபதுக்கு இருபது போட்டித் தொடரின் 6 போட்டிகளில் பங்கேற்றுள்ளன.
இதில் பாகிஸ்தான் அணி நான்கு போட்டிகளிலும், நியூசிலாந்து அணி இரண்டு போட்டிகளிலும் வெற்றிப் பெற்றுள்ளன.