follow the truth

follow the truth

January, 27, 2025
Homeஉள்நாடுகேக் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட 5 பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் –...

கேக் மற்றும் பிஸ்கட் உள்ளிட்ட 5 பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் – வர்த்தமானி வெளியீடு!

Published on

இலங்கைக்கு இறக்குமதி செய்யப்படும் ஐந்து பொருட்களுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என்று நிபந்தனை விதித்து நுகர்வோர் விவகார அதிகாரசபை அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலொன்றை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நேற்று முதல் அமுலுக்கு வருவதாக குறித்த அதிவிசேட வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, இறக்குமதி செய்யப்படும் சுவிங் கம் உள்ளிட்ட இனிப்புகள், சொக்லேட், பிஸ்கட், கேக் மற்றும் வாசனை சவர்க்காரங்கள் ஆகியவற்றுக்கு அதிகபட்ச சில்லறை விலை நிர்ணயிக்கப்பட வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது இறக்குமதியாளர்கள் அதிகபட்ச சில்லறை விலை, இறக்குமதியாளரின் பெயர் மற்றும் பதிவு செய்யப்பட்ட முகவரி ஆகியவற்றை ஆங்கிலத்தில் தெளிவாக பதிவு செய்ய வேண்டும் என நுகர்வோர் விவகார அதிகாரசபை தெரிவித்துள்ளது.

No description available.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

ரயில் ஈ-டிக்கெட் மோசடி – சுற்றுலா வழிகாட்டிக்கு பிணை

ரயில்வே திணைக்களத்தால் வழங்கப்பட்ட ஈ-டிக்கெட்டுகளை ஒன்லைனில் சட்டவிரோதமாக கொள்வனவு செய்தமை தொடர்பாக கைது செய்யப்பட்ட சுற்றுலா வழிகாட்டியை பிணையில்...

இலங்கை விமானப்படைக்கு புதிய தளபதி நியமனம்

20ஆவது விமானப்படை தளபதியாக எயார் வைஸ் மார்ஷல் வாசு பந்துல எதிரிசிங்க நியமிக்கப்பட்டுள்ளார் ஜனவரி 29 ஆம் திகதி முதல்...

2030ம் ஆண்டில் 36 பில்லியன் டொலர் ஏற்றுமதி இலக்கு

புதிய அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்வு" கொள்கை பிரகடனத்துக்கு அமைவாக 2030 ஆம் ஆண்டளவில் ஏற்றுமதி...