T-20 உலகக்கிண்ணத் தொடரின், சுப்பர்-12 குழு-1இல் நடைபெற்ற தொடரின் 31ஆவது போட்டியில், அவுஸ்ரேலியா அணி 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
பிரிஸ்பேனில் இன்று நடைபெற்ற இப்போட்டியில், அவுஸ்ரேலிய அணியும் அயர்லாந்து அணியும் பலப்பரீட்சை நடத்தின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற அயர்லாந்து அணி முதலில் களத்தடுப்பை தீர்மானித்தது.
இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய அவுஸ்ரேலியக் கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக் 179 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, ஆரோன் பின்ஞ் 63 ஓட்டங்களையும் ஸ்டொயினிஸ் 35 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
இதனைத்தொடர்ந்து 180 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 18.1 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. இதனால், அவுஸ்ரேலியா அணி, 42 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.