இலங்கையின் தெற்கிலிருந்து வடக்கு நோக்கி 600 கிலோமீட்டர் தூரம் கொண்ட 24 மணிநேர சைக்கிளோட்டப் போட்டியின் ஐந்தாவது சுற்றுப் போட்டி எதிர்வரும்
நவம்பர் மாதம் 5 ஆம் திகதி தென் மாகாணத்தில் உள்ள தேவேந்திர முனையிலிருந்து ஆரம்பமாகவுள்ளது.
இந்த போட்டிகள் தொடர்பாக ஊடகங்களுக்கு தெளிவுபடுத்தும் ஊடக மாநாடு இன்று கொழும்பு Light House Galley இல் இடம்பெற்றது.
05 சுற்றுக்களைக் கொண்ட இப்போட்டி தேவேந்திர முனையில் இருந்து ஆரம்பமாகி வடக்கில் உள்ள பருத்தித்துரையை சென்றடையவுள்ளதுடன் முதற்கட்டமாக தேவேந்திர முனை முதல் வெல்லவாய வரையிலான 145 கிலோமீற்றர் தூரமும், இரண்டாம் கட்டமாக வெல்லவாய முதல் மஹியங்கனை வரையிலான 116
கிலோமீற்றர் தூரமும், மூன்றாம் கட்டமாக மஹியங்கனையிலிருந்து தம்புள்ளை வரையிலான 92 கிலோமீற்றர் தூரமும் நான்காவது கட்டமாக தம்புள்ளையிலிருந்து
வவுனியா வரையான 106 கிலோமீற்றர் தூரமும் இறுதியாக ஐந்தாவது கட்டமாக வவுனியாவிலிருந்து பருத்தித்துறை வரையிலான 142 கிலோமீற்றராகவும்
இப்போட்டி இடம்பெறவுள்ளது
இந்தப் போட்டியில் முக்கியமாக 06 சிறந்த சைக்கிள் ஓட்டுநர்கள் குறிப்பாக அமெரிக்காவைச் சேர்ந்த ஒருவரும் பிரிட்டனைச் சேர்ந்த 03 பேரும்
02 இலங்கையர்களும் வழிநடத்துவதோடு இதில் 50 இற்கும் மேற்பட்டோர் பங்குபற்றுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
‘Race the Pearl’ சைக்கிளோட்டப் போட்டியானது வரவிருக்கும் RAAM ( Race Across America) இற்கான தகுதிகாண் போட்டியாக கருதப்படுகிறது. RAAM என்பது சர்வதேச அளவில் புகழ்பெற்ற சைக்கிள் ஓட்டப் போட்டியாகும். இது அமெரிக்காவின் மேற்கு கடற்கரையிலிருந்து கிழக்கு கடற்கரை வரை 4,800 கிலோமீட்டர்களுக்கு அதிகமான தூரத்தை உள்ளடக்கிய போட்டியாகும்.