T-20 உலகக்கிண்ணத் தொடரில் இலங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் விதியசத்தில் வெற்றிபெற்றுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றிபெற்று முதலில் இங்கிலாந்து அணி களத்தடுப்பை தெரிவு செய்ய அயர்லாந்து அணி துடுப்பெடுத்தாடியது.
அயர்லாந்து அணி 19.2 ஓவர்கள் நிறைவில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 157 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது. அவ்வணி சார்பாக பெல்பிர்னி 62 ஓட்டங்களை பெற்றுக்கொடுத்தார்.
இலங்கிலாந்து அணி சார்பாக பந்துவீச்சில் மார்க் வூட் மற்றும் லிவிங்ஸ்டன் ஆகியோர் தலா 03 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதனை அடுத்து 158 என்ற வெற்றி இலக்கை நோக்கி இங்கிலாந்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய போது 14.3 ஓவரில் மழை குறுக்கிட்டது. இதனால் டக்வொர்த்-லூயிஸ் முறைப்படி அயர்லாந்து அணி 5 ஓட்டங்கள் விதியசத்தில் வெற்றி பெற்றது.
இங்கிலாந்து அணி சார்பாக டேவிட் மலான் 35 ஓட்டங்களையும் மொயின் அலி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தார்.