டீ -20 உலகக்கிண்ணத் தொடரின், குழு பி- 11ஆவது தகுதி சுற்று லீக் போட்டியில், மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி அயர்லாந்து அணி சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்துள்ளது.
இன்று நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 146 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.
இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, பிரெண்டன் கிங் ஆட்டமிழக்காது 62 ஓட்டங்களையும் ஜோன்சன் சார்லஸ் 24 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், கரேத் டெலானி 3 விக்கெட்டுகளையும் மெக்கார்த்தி மற்றும் சிம்மி சிங் ஆகியோர் தலா 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.
இதனைத்தொடர்ந்து 147 ஓட்டங்கள் என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய அயர்லாந்து அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 1 விக்கெட் இழப்புக்கு வெற்றி இலக்கை கடந்தது.
இதனால், அயர்லாந்து அணி 9 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்று சுப்பர்-12 சுற்றுக்குள் நுழைந்தது.
இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, போல் ஸ்டெயர்லிங் ஆட்டமிழக்காது 66 ஓட்டங்களையும் டக்கர் ஆட்டமிழக்காது 45 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
மேற்கிந்திய தீவுகள் அணியின் பந்துவீச்சில், அக்கீல் ஹொசைன் 1 விக்கெட்டினை வீழ்த்தினார்.
இப்போட்டியின் ஆட்டநாயகனாக அயர்லாந்து அணியின் பந்துவீச்சில், 3 விக்கெட்டுகளை வீழ்த்திய கரேத் டெலானி தெரிவுசெய்யப்பட்டார்.