எட்டாவது ஐசிசி ரி20 உலகக் கிண்ண தொடரில் 10 ஆவது தகுதி சுற்று போட்டியில் விளையாடிய ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் நமீபியா அணிகளுக்கிடையேயான போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய அணி ஆறுதல் வெற்றி பெற்றுள்ளது.
நாணய சுழற்சியை வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சிய அணி 20 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்புக்கு 148 ஓட்டங்கள் எடுத்து.
149 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய நமீபியா அணி, 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 141 ஓட்டங்கள் மட்டுமே எடுத்து.
இதனால் ஐக்கிய அரபு இராச்சிய அணி, 7 ஓட்டங்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்று நமீபியாவின் சூப்பர்-12 வாய்ப்பை தட்டிப்பறித்தது.
இதன் அடிப்படியில் தற்போது குரூப் A வில், இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12க்கு முன்னேறுகின்றன.
அதனடிப்படையில் சூப்பர்-12 போட்டியில் இலங்கை அணி குரூப் 1 இலும் நெதர்லாந்து அணி குரூப் 2 விலும் போட்டியிட உள்ளமை குறிப்பிடத்தக்கது.
குரூப் B இல் இன்னும் இரண்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளன.
நாளையோடு தகுதி சுற்று போட்டிகள் நிறைவடைவதால், அதன் முடிவில் இன்னும் இரண்டு அணிகள் சூப்பர்-12 க்கு தகுதி பெறும்.