இலங்கையில் தற்போது காணப்படும் பொருளாதார நெருக்கடி தீவிரமடைந்தால் அல்லது தொடர்ந்து நீடித்தால் இலங்கையின் வர்த்தக துறை மோசமான பாதிப்புகளை எதிர்கொள்ளவேண்டி வரும் என Fitch Ratings தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் பணவீக்கம் அதிகரிக்கப்பட்ட வட்டி வீதங்கள் இறக்குமதி கட்டுப்பாடுகள் இலங்கையின் வர்த்தக சமூகத்தின் வருமானம் இலாபம் போன்றவற்றில் ஏற்கனவே பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன எனவும் Fitch Ratings தெரிவித்துள்ளது.
இலங்கையின் பொருளாதார நெருக்கடி பங்குசந்தையில் இடம்பெற்றுள்ள நிறுவனங்களிற்கு ஏற்படுத்தக்கூடிய பாதிப்பு குறித்து Fitch Ratings அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
தற்போதைய நிலை தொடர்ந்தால் நுகர்வோர் பொருட்களின் சில்லறை விற்பனை துறையினர் மின் உற்பத்தி வீட்டு கட்டுமானம் போன்ற துறைகள் நீண்ட கால நெருக்கடியால் பாதிக்கப்படும் இந்த நிலை 12 முதல் 18 மாதங்கள் வரை நீடிக்கும் எனவும் Fitch Ratingsதெரிவித்துள்ளது.