2020 உலகக் கிண்ணத் தொடரின் முதல் சுற்றில் இலங்கை மற்றும் ஐக்கிய அரபு இராச்சிய அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டியில் இலங்கை அணி 79 ஓட்டங்களால் வெற்றியீட்டியுள்ளது.
டாஸ் வென்ற ஐக்கிய அரபு இராச்சிய அணியின் தலைவர் இலங்கை அணியை முதலில் துடுப்பெடுத்தாட அழைத்தார்.
அதன்படி களம் இறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 8 விக்கெட்டுகளை இழந்து 152 ஓட்டங்களை பெற்றுள்ளது.
சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய பெத்தும் நிஸ்ஸங்க 60 பந்துகளில் 74 ஓட்டங்களைப் பெற்றார்.
பதிலுக்கு துடுப்பாடிய அமீரக வீரர்களை எந்த வகையிலும் தலை தூக்க இலங்கை பந்துவீச்சாளர்கள் அனுமதிக்கவில்லை.
துரதிர்ஷ்டவசமாக, ஐக்கிய அரபு இராச்சிய அணியின் வீரர்கள் எவராலும் 20 ஓட்டங்களை கடக்க முடியவில்லை.
சிறப்பாக பந்துவீசிய வேகப்பந்து வீச்சாளர் துஷ்மந்த சமீர 15 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தியதுடன் இருபதுக்கு 20 போட்டிகளில் தனது 50 ஆவது விக்கெட்டையும் பதிவு செய்தார்.
இலங்கை தரப்பில் வனிந்து ஹசரங்க 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சிய அணி 17.1 ஓவர்களில் 73 ஓட்டங்களை மாத்திரம் பெற்று தோல்வியை தழுவியது.
போட்டியில் வீரராக பெத்தும் நிஸ்ஸங்க தெரிவானார்.