Online ஊடாக கற்பித்தலில் ஈடுபடும் பாடசாலை ஆசிரியர்களுக்கு, கற்பித்தல் செயற்பாடுகளை நிறுத்துமாறு எவரேனும் அச்சுறுத்தல் விடுக்கும் பட்சத்தில் முறைப்பாடு செய்யுமாறு பாடசாலை ஆசிரியர்களுக்கு பொலிஸார் ஆலோசனை வழங்கியுள்ளார்.
அதனடிப்படையில், குற்றப்புலனாய்வு திணைக்களம் (CID), 119 எனும் அவசர தொலைபேசி இலக்கத்தின் ஊடாக அல்லது அருகிலுள்ள பொலிஸ் நிலையங்களில் முறைப்பாடுகளை பதிவு செய்ய முடியும் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கிடைக்கும் முறைப்பாடுகள் தொடர்பில் விரைந்து சட்ட நடவடிக்கை எடுக்குமாறு பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ரியர் அட்மிரல் கலாநிதி சரத் வீரசேகர, பொலிஸ்மா அதிபர், குற்றப்புலனாய்வு திணைக்களம், பிரதி பொலிஸ்மா அதிபருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.