சுற்றுலா பயணிகளுக்கான எரிபொருள் அட்டை மற்றும் ப்ரீபெய்ட் கார்டு அமைப்பு நேற்று அறிமுகப்படுத்தப்பட்டது, இதன் மூலம் சுற்றுலா பயணிகள் நாட்டிலுள்ள 300 க்கும் மேற்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இருந்து அமெரிக்க டொலர் ப்ரீபெய்ட் கார்டைப் பயன்படுத்தி எரிபொருளைப் பெற முடியும் என்று மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் உள்ள டயலொக் மற்றும் சம்பத் வங்கி கவுன்டர்களில் இந்த அட்டையை பெற முடியும் எனவும் தெரிவித்தார்.
1) Tourist Fuel Pass, Pre Paid Card system was launched today. This will enable tourist to use a USD Pre Paid Card to Purchase Fuel at 300+ Fuel Stations Islandwide. The card will be available at Airport Dialog & Sampath Bank Counters & can be topped up at Sampath Bank Branches. pic.twitter.com/zOHrp4XnLL
— Kanchana Wijesekera (@kanchana_wij) October 5, 2022