follow the truth

follow the truth

February, 21, 2025
Homeஉள்நாடுபோகாவத்த பாடசாலை அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

போகாவத்த பாடசாலை அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி மாணவர்கள், பெற்றோர்கள் போராட்டம்

Published on

போலிக் குற்றச்சாட்டுகளின் பிரகாரம் இடமாற்றம் செய்யப்பட்டுள்ள அதிபரை, மீண்டும் தமது பாடசாலைக்கு நியமிக்குமாறு வலியுறுத்தி கொட்டகலை, பத்தனை – போகாவத்த சிங்கள வித்தியாலய மாணவர்களும், அவர்களின் பெற்றோரும் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

No description available.

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு பாடசாலையில் பணம் வசூலிக்கப்பட்டதாகவும், அதனை வழங்க மறுத்த மாணவியொருவரை அதிபர் தாக்கினார் எனவும் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு போலியானது என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.

No description available.

எனவே, இது தொடர்பில் விரைவில் விசாரணைகளை முன்னெடுத்து, தமது பாடசாலை முன்னேற்றத்துக்காக பாடுபட்ட அதிபரை மீண்டும் தமது பாடசாலைக்கு அனுப்புமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் கோரிக்கையும் விடுத்தனர்.

No description available.
எதிர்ப்பு பதாதைகளை ஏந்தியவண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டகாரர்கள் போராட்டத்தினை சுமார் இரண்டு மணித்தியாலயங்கள் முன்னெடுத்திருந்தமை குறிப்பிடதக்கது.

No description available.

 

(க.கிஷாந்தன்)

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

வித்யா படுகொலை வழக்கு – முன்னாள் DIGக்கு கடூழிய சிறைத்தண்டனை

வித்யா படுகொலை வழக்கின் பிரதான சந்தேக நபரை ஆரம்பத்தில் விடுவித்ததாக குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா...

அக்குரெஸ்ஸ ‘ஒலு தொல’வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவது குறித்து அவதானம்

மாத்தறை மாவட்டத்தின் அகுரெஸ்ஸவில் உள்ள 'ஒலு தொல'வை சுற்றுலாத் தலமாகப் பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய, அக்குரெஸ்ஸ பிரதேச செயலகம்,...

நாட்டின் பல பகுதிகளில் நாளையும் கடும் வெப்பம்

நாட்டின் பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை அடுத்த 24 மணி நேரத்திற்குக் கவனம் செலுத்த வேண்டிய...