கோட்டாபய ராஜபக்ச மீண்டும் அரசியலுக்கு வந்தாலும் மக்களின் நம்பிக்கையை பெறுவது கடினமாகும்.
எனவே மஹிந்த ராஜபக்ஷ தான் மொட்டுக் கட்சியின் வாக்கு இயந்திரம். எனவே அவருக்கு கீழ் பொதுஜன பெரமுன எதிர்காலத்தில் வரும் தேர்தல்களில் புதிய ஆற்றலுடன் செயற்படும் என Daily Ceylonசெய்தி பிரிவுக்கு
தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் மஹிந்த ராஜபக்ஷ கட்சியின் தலைவராக நியமிக்கப்படவுள்ளதாகவும் அதன் பின்னர் எதிர்வரும் மார்ச் மாதம் நடைபெறவுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
2030 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலுக்கு நாமல் ராஜபக்ஷவை தயார்படுத்துவதே இந்த வேலைத்திட்டத்தின் நோக்கமாகும் எனவும் இதன்படி 2025 ஆம் ஆண்டுக்கு பொதுஜன பெரமுன அதிக நம்பிக்கையை கொண்டிருக்கவில்லை எனவும் கட்சியின் உள்ளக வட்டாரங்களிலிருந்து தெரியவந்துள்ளது.