follow the truth

follow the truth

November, 25, 2024
HomeUncategorizedவழக்கை கைவிடுங்கள் – அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை கோரிக்கை!

வழக்கை கைவிடுங்கள் – அமெரிக்க நீதிமன்றத்திடம் இலங்கை கோரிக்கை!

Published on

இறையாண்மை பத்திரங்களை செலுத்த தவறியமை தொடர்பாக ஹமில்டன் ரிசர்வ் வங்கி நியூயோர்கில் தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்யுமாறு அமெரிக்க நீதிபதியை இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

நிதிச் செய்தி சேவை நிறுவனமான ப்ளூம்பெர்க் இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த வழக்கு, நெருக்கடியில் உள்ள ஒரு நாட்டின் மீது செல்வாக்கு செலுத்தி மற்ற வெளிநாட்டு கடன் வழங்குநர்களை விட நலன் பெறுவதற்கான வெளிப்படையான முயற்சி என்று கூறி, வழக்கை தள்ளுபடி செய்யுமாறு இலங்கை அரசாங்கம் கோரியுள்ளது.

ஒரு பில்லியன் டொலர் இறையாண்மைப் பத்திரத்தை, இலங்கை செலுத்தத் தவறியதைக் காரணம் காட்டி, கரீபியன் தீவுகளான செயின்ட் கிட்ஸ் & நெவிஸை தளமாகக் கொண்ட ஹமில்டன் ரிசர்வ் வங்கி இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளது.

இலங்கை, கடந்த 2022 ஜூலை 25ஆம் திகதி அன்று 5.875% வட்டியில் சர்வதேச இறையாண்மை பத்திரங்களை செலுத்த வேண்டியிருந்தது.

இதேவேளை, பத்திரங்களின் விதிமுறைகளின்படி, இலங்கை, அந்த வங்கிக்கு மொத்தம் 257,539,331.25 அமெரிக்க டொலர்கள் செலுத்த வேண்டியுள்ளது.

இது 250,190,000 டொலர் அசல் மற்றும் 7,349,331.25 டொலர் வட்டியை உள்ளடக்கியுள்ளதாக நீதிமன்ற ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_img

LATEST NEWS

MORE ARTICLES

முஸ்லிம் காங்கிரஸ் தேசிய பட்டியல் உறுப்பினர் – வௌியான வர்த்தமானி

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசியப்பட்டியல் உறுப்பினர் பதவிக்கு முஹம்மது சாலி நளீமின் பெயரை உள்ளடக்கி வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. தேர்தல்...

காலி மாவட்டம் – பலப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள்

பத்தாவது பாராளுமன்றத்திற்கான உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்காக நடைபெற்ற தேர்தலின் காலி மாவட்டம் - பலப்பிட்டிய தேர்தல் தொகுதி முடிவுகள் வெளியாகியுள்ளன. 🔹தேசிய...

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த தொழில் வாய்ப்பை இழக்கும் அபாயத்தில் இலங்கை

தென் கொரியாவினால் வழங்கப்படவிருந்த 10,000 தொழில் வாய்ப்பை இலங்கை இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, விவசாயம் மற்றும்...