இலங்கையில் கறுப்பு பூஞ்சை தொற்றுக்குள்ளான கொரோனா நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
கொரோனா தொற்றுக்குள்ளாகி, நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களுக்கு கறுப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதாக பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் ஹேமந்த ஹேரத் தெரிவித்தார்.
எனினும், இந்த கறுப்பு பூஞ்சைத் தொற்று ஒருவரிடமிருந்து மற்றொருவருக்கு பரவும் அபாயம் இல்லையெனவும் அவர் கூறினார்.
நீண்ட நேரம் முகக்கவசங்களை அணிவதால் கருப்பு பூஞ்சை நோய் பரவும் அபாயம் இருப்பதாக மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
மேலும், ஒரே முகக்கவசத்தை மற்றும் அழுக்கு முகக்கவசத்தை நீண்ட நேரம் அணிந்திருப்பது கருப்பு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கு ஒரு காரணமாக அமைந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.